1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (20:45 IST)

ஐபிஎல் தொடரை புறக்கணித்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இப்போட்டியில் இந்திய வீரர்கள்,  சர்வதேச அணிகளைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஏலத்தில், 10 அணி நிர்வாகத்தால் பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவர்.

இந்த ஐபிஎல் போட்டிக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உள்ளாதால் இதன் ஒளிபரப்பிலும் பெரிய சாதனை படைத்து வருகிறது.
bangaldesh

இந்த நிலையில்,  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை புறக்கணித்ததால் வங்கதெச நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் போர்டு. அதன்படி,   ஐபிஎல் தொடரை புறக்கணித்து, சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கிய  வங்கதேச அணி வீரர் சகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், தஸ்கின் அஹமது ஆகியோருக்கு 65 000 அமெரிக்க டாலர்கள் ஊக்கத்தொகையையாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.