திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 25 நவம்பர் 2023 (09:30 IST)

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் ஹர்திக் பாண்ட்யா…!

உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குதான் திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு, குஜராத் அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.