ஆஸ்திரேலியா சீரிஸுக்கும் ஹர்திக் பாண்ட்யா சந்தேகம்… கேப்டன் யார்?
உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நடக்க உள்ள ஆஸ்திரேலியா டி 20 தொடருக்கும் அவர் திரும்புவது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. டி 20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா இல்லாத சூழல் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.