மீண்டும் ஆர் சி பி அணிக்குக் கேப்டனாக விராட் கோலி? முன்னாள் சி எஸ் கே வீரர் சொல்லும் ஐடியா!
ஐபிஎல் 2024 சீசனில் முதல் 7 போட்டிகளில் 6 போட்டிகளைத் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர் சி பி அணி , அடுத்த 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி சில போட்டிகளின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.
அந்த அணியின் இந்த கம்பேக்குக்கு அந்த அணியின் மூத்த வீரர் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கும் முக்கியக் காரணம். இந்நிலையில் சி எஸ் கே அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆர் சி பி அணியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
அதில் “இந்த ஆண்டு ஆர் சி பி ப்ளே ஆஃப்க்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்த ஆண்டு ஒரு இந்தியரை அந்த அணிக்குக் கேப்டனாக நியமிக்கவேண்டும், ஏன் விராட் கோலியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம். அவரால் அணிக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும். அணிக்குள் அவர் ஆக்ரோஷத்தை அதிகரித்துள்ளார். இதனால் அவரே மீண்டும் அந்த அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு விராட் கோலி ஆர் சி பி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.