ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோலியும் டெல்லி அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் கோலி ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குக் கழுத்து வலி பிரச்சனை உள்ளதால் அவர் விளையாட மாட்டார் எனவும் கே எல் ராகுல் முழங்கை வலிக் காரணமாக விளையாட மாட்டார் எனவும் சொல்லப்படுகிறது.