புதன், 12 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By bala
Last Modified: திங்கள், 2 மே 2016 (14:15 IST)

ராயுடுவை தகாத வார்த்தையில் திட்டிய ஹர்பஜன் சிங்- பரபரப்பு வீடியோ

புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் ராயுடுவ்ய்டன் மோதிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


 

ஐபிஎல் போட்டி தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று மும்பை இந்தியன் அணியுடன் ரைசிங் புனே அணி மோதும் ஆட்டம் புனேவில் நடைபெற்றது. இதில் ஹர்பஜன் சிங் போட்ட பந்தை தோனி அணி வீரர் பவுண்டரியை நோக்கி அடித்தார். இதையடுத்து பந்தை தடுக்க முயன்றார் ராயுடு. ஆனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் கோபமடைந்த ஹர்பஜன் சிங் ராயுடுவை தகாத வார்த்தைகளில் திட்டினார். இதனால் ராயுடு கடும் கோபமடைந்தார். மைதானத்தில் இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் எழுந்தது. நிலைமையை உணர்ந்த  ஹர்பஜன் ராயுடுவை சமாதானப்படுத்த முயன்றும் ராயுடு கோபம் தனியாமல் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...