புதன், 12 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (08:44 IST)

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் இவர்தான்..!

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி. இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

ஆனால் வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் காயம் காரணமாக அவர் வெளியேறியுள்ளார். அதனால் ஆஸி அணிக்குப் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். பால் டேம்பரிங் சர்ச்சைக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஸ்மித் ஆஸி அணிக்குத் தலைமையேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுஸ், நாதன் எல்லீஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்,  ஆரோன் ஹார்டி,  டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷான், க்ளன் மேக்ஸ்வெல், டன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா