திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 21 ஜனவரி 2023 (09:18 IST)

ஒல்லியான வீரர்தான் வேண்டும் என்றால் பேஷன் ஷோக்களுக்கு செல்லுங்கள்… இந்திய அணியை சாடிய கவாஸ்கர்!

தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சர்பராஸ் கான்.

ஆனால் இந்த ஆண்டு அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் தேர்வுக்குழு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “அவர் அனைத்து விதத்திலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு தகுதியானவரே. உங்களுக்கு ஒல்லியாக பிட்டாக இருக்கும் வீரர்கள் தான் வேண்டும் என்றால் பேஷன் ஷோக்களுக்கு செல்லுங்கள். அங்கிருக்கும் மாடல்களிடம் பேட் மற்றும் பந்தை கொடுத்து கிரிக்கெட் விளையாட சொல்லுங்கள்.” எனக் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.