ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (20:50 IST)

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்.!

Gowtham Gambir
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற உற்சாகத்துடன், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. அந்தப் பதவிக்காக கவுதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படுவார் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும்  தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு, பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கியதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்திய அணி பற்றிய அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவத்துடன் இணைந்து, இந்த உற்சாகமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர் பாத்திரத்தை ஏற்று அவரை முழுமையாக நிலைநிறுத்துகிறது என்றும் அவர் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும்போது பிசிசிஐ கௌதம் கம்பீருக்கு முழு ஆதரவளிக்கிறது என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்