வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2024 (11:48 IST)

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் உலக கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் அனைவரிடமும் பேசி பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப் போட்டியில் அரைசதம் விலாசிய விராட் கோலி ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி கடைசி ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியா,  அந்த ஓவரில் டேவிட் மில்லர் கேட்சை அபாரமாக பிடித்த சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் தனது ஸ்பெஷல் பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிடிற்கும் பிரதமர் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva