1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (11:16 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் விண்ணப்பம்: அதிர்ச்சி தகவல்..!

Modi
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களின் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின், தோனி உள்ளிட்டோர் பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் ஏராளமான போலி விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
 
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி என தகவல்கள் வெளியானதை அடுத்து பிசிசிஐ அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran