திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (08:37 IST)

ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்!

இந்தியாவுக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தேன். எங்களது முயற்சியின் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். எனது சக வீரர்கள் பயிற்சியாளர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என சூசகமாக தனது ஓய்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இப்போது அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

இதற்கிடையில் தினேஷ் கார்த்திக் பல போட்டித் தொடர்களில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட உள்ளார்.