செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:33 IST)

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் தினேஷ் கார்த்திக் தேவையில்லை… மூத்த வீரரின் ஆடும் லெவன்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பையில் விளையாடும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் வெளியான நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோத உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிதான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவையில்லை என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவு செய்துள்ள ஆடும் லெவன் அணி
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.