1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona cases again cross 10 thousand

ஒரே நாளில் 10,649 பேர் பாதிப்பு; 36 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் தற்போது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது மீண்டும் 10 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,43,68,195 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,27,452 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,37,44,301 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 96,442 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
இந்திய கலாச்சாரம் மீது ஈர்ப்பு! கன்னியாக்குமரி பெண்ணை கரம்பிடித்த ஜெர்மானியர்!