1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (09:20 IST)

தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை காக்க..? – மத்திய அரசு வழிகாட்டு முறைகள்!

Tomato Virus
இந்தியா முழுவதும் குழந்தைகளிடையே அதிகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் (Tomato Virus) குறித்த முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

உடலில் சிகப்பு நிறத்தில் ஏற்படும் கொப்புளங்கள் தக்காளி காய்ச்சல் எனப்படுகிறது. சமீபமாக இந்த காய்ச்சல் இந்தியாவில் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தக்காளி காய்ச்சல் குறிப்பாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குவதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் 82 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுகுறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
அதில் “தக்காளி காய்ச்சல் வைரஸ் அறிகுறிகள் மற்ற வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகளை போல காய்ச்சல், சோர்வு, உடல் வலிகள் மற்றும் தோலில் தடிப்புகளை கொண்டிருந்தாலும், அவை டெங்கு, கொரோனா, சிக்கன்குனியா போன்றவற்றுடன் தொடர்புடையவை அல்ல” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Mask

மேலும் “காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பிற குழந்தைகள் தொடவோ, கட்டுப்பிடிக்கவோ அனுமதிக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டு. மூக்கு ஒழுகுதல் அல்லது இறுமல் ஏற்பட்டால் குழந்தைகளை கைக்குட்டையை பயன்படுத்த ஊக்குவிக்கவேண்டும்.

மேலும் குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊட்டசத்தான உணவுகளை வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.