ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (09:40 IST)

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டராக தோனியை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் உச்சிமுகரப்பட்ட கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார்.

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் வென்றது இந்தியா. தோனி தன்னுடைய பள்ளித் தோழியான சாக்‌ஷியை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஸீவா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் தோனி- சாக்‌ஷி தம்பதி தங்கள் 15 ஆவது திருமண நாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.