பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி – களைகட்ட போகும் மொடாரோ மைதானம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஓராண்டுக்கு முன்னதாக பகலிரவு டெஸ்ட் போட்டியை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 5டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மொடரோ மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடக்கும் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 டி 20 போட்டிகளும் அதே மைதானத்தில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.