திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (14:55 IST)

அடுத்த ஆண்டில் ஆர்சிபிக்கு கப் உறுதி? கேப்டனாகும் கே.எல்.ராகுல்! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

KL Rahul

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக கே..எல்.ராகுல் விளையாட உள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் இந்த போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால் விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

ஆரம்பத்திலிருந்தே ஆர்சிபி கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் பாப் டூ ப்ளெசிஸ் உள்ளிட்டோர் கேப்டனாக செயல்பட்டபோதும் ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனில் முதல் பாதியில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் இறங்கி அடித்த ஆர்சிபி அணி குவாலிபயர் வரை சென்று தோல்வியை தழுவியது.
 

ஆர்சிபிக்கு அணிக்கு வலிமையான ஒரு கேப்டன் வேண்டும் என ரசிகர்களிடையே பேச்சு எழுந்து வந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013, 2016ம் ஆண்டு சீசன்களில் கே.எல்.ராகுல் ஆர்சிபிக்காக விளையாடியவர் என்றாலும், தற்போது லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் கடந்த சீசனில் லக்னோ அணி தோற்றபோது அதன் உரிமையாளர் கே.எல்,ராகுலிடம் மோசமாக பேசும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதே ஆர்சிபி ரசிகர்கள் கே.எல்.ராகுலை ஆர்சிபி அணிக்கு வந்துவிடும்படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுல் ஆர்சிபியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K