1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (19:15 IST)

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

CSK vs RCB updates

CSK vs RCB: இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்துள்ளது.

 

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் பதிரானா இடம்பெறாமல் இருந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவில் பதிரானா இணைந்துள்ளார். இதனால் கடந்த சீசன்களை போலவே கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை தூக்க பதிரானா முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜாஸ் ஹெசில்வுட், யாஷ் தயால்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தீபக் ஹூடா, சாம் கரண், ரவிந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, மதிஷா பதிரானா, கலீல் அஹமது,