Daily Horoscope
✕

தோனியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சிஎஸ்கே நிர்வாகம்… என்ன முடிவெடுக்கப் போகிறார் ‘தல’?

Written By vinoth
Updated: வியாழன், 17 அக்டோபர் 2024 (14:36 IST)
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து எந்தவிதமான முடிவையும் தோனி இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இப்போது சிஎஸ்கே நிர்வாகம் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை தோனி தன்னுடைய முடிவை அறிவிக்கவில்லை என்றும் விரைவில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.

எல்லாம் காட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments