1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மே 2024 (19:20 IST)

பஞ்சாப்பை பறக்கவிட்ட சிஎஸ்கே.. 38 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!

CSK vs PBKS
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.



டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து ஆரம்பமே சிஎஸ்கேவின் ரன்களை கட்டுப்படுத்த தொடங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் எளிய இலக்கை நோக்கி பஞ்சாப் களமிறங்கியது.

ஆனால் பஞ்சாபுக்கு பதிலடியாக சிஎஸ்கே பவுலிங்கின் அதிரடி காட்டியது. பவர் ப்ளே முடிவதற்குள்ளேயே ஜானி பேர்ஸ்டோ, ரஸ்ஸோவை தூக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் துஷார் தேஷ்பாண்டே. பின்னர் 7வது ஓவரில் இருந்து 10 வது ஓவருக்குள் வரிசையாக 3 விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் பார்ட்னர்ஷிப்பும் செய்ய முடியாமல் தடுமாறத் தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், இம்பேக்ட் ப்ளேயராக இறன்ஹ்கிய சிம்ரஜித் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே புள்ளி வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Edit by Prasanth.K