வேறொரு பெண்ணுக்கு காதலர் தின வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சினிமா, கிரிக்கெட், உள்ளிட்ட பிரபலங்களும் தம் மனைவி மற்றும் காதலிக்கு வாழ்த்துகள் கூறினர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்,தன் மனைவிக்குப் பதிலாக வேறொரு பெண்ணிற்கு டேக் செய்து காதலர் தின வாழ்த்துக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி.-20, டெஸ்ட், ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில்( நாக்பூர்) ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே 2 வது டெஸ்ட் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்று வேலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித், தன் சமூக வலைதளத்தில் தன் மனைவி என் நினைத்து வேறொரு பெண்ணிற்கு வாழ்த்துக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, அவரது மனைவி டேனி வில்லீஸ் சமூக வலைதளத்தில் டேக் செய்வதற்குப் பதில், வேறொரு பெண்ணை டேக் செய்தது குறிப்பிடத்தக்கது.