திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:14 IST)

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் இடமாற்றம்: என்ன காரணம்?

India Test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாங்கள் நாக்பூரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போற்றி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அது இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தர்மசாலா மைதானம் டெஸ்ட் போட்டி விளையாட தகுதியானது தானா? என்று ஆய்வு செய்த பிசிசி அதிகாரிகள் அதன் பின்னர் டெஸ்ட் ஆட்டம் நடத்துவதற்கான தகுதி இல்லை என்று முடிவு செய்ததை அடுத்து இந்த டெஸ்ட் இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி தர்மசாலாவுக்கு பதிலாக இந்தூரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தூரில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
 
Edited by Mahendran