இந்திய அணியில் இப்போது முக்கிய வீரர் இவர்தான்… பந்துவீச்சு பயிற்சியாளர் சொன்ன தகவல்
இந்திய அணியில் காயம் காரணமாக பூம்ரா விளையாடாமல் இருந்தாலும், அவரின் இல்லாத வெற்றிடத்தை சிராஜ் கொஞ்சம் போக்கி வருகிறார்.
கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள பந்துவீச்சு பயிற்சியாளர் பாஸ் மாம்ப்ரே “இப்போது இந்திய அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் சிராஜ்தான். அவர் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி. அவர் உலகக்கோப்பை தாண்டியும் சிறப்பாக விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறோம்” எனக் கூறியுள்ளார்.