Daily Horoscope

பேட்டிங் பௌலிங் எதுவும் பண்ணாம ஜெயிச்ச முதல் கேப்டன்… பென் ஸ்டோக்ஸ் படைத்த வித்தியாச சாதனை!

Written By vinoth
Updated: திங்கள், 5 ஜூன் 2023 (07:46 IST)
இங்கிலாந்து அணி தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 362 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 11 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் ஆடிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் பங்கேற்கவில்லை. விக்கெட் கீப்பிங் பணியும் செய்யவில்லை. இப்படி மூன்றுமே செய்யாமல் ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற முதல் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments