துணை கேப்டன் கடைசி வரிசையில், மனைவி முதல் வரிசையில்...
இந்திய கிரிக்கெட் கோலி தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, இந்திய தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. அங்கு இந்திய அணி வீரர்களை கெளரவித்தனர்.
இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் கலந்துக்கொண்டனர். கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இறுதியாக அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அந்த புகைப்படத்தில் முதல் வரிசையில் அனுஷ்கா சர்மா நின்று போஸ் கொடுத்தார். ஆனால், துணை கேப்டன் ரகானே கடைசி வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்.
இந்த புகைப்படம் பிசிசிஐ சார்பாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதால் இதை கண்ட நெட்டிசன்கள் பலர் பாலிபுட் நடிகைக்கு இந்திய அணியில் என்ன வேலை? துணை கேப்டன் கடைசி வரிசையில், மனைவி முதல் வரிசையிலா? என பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதற்கு முன்னர்தான் வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.