200 விக்கெட் விழ்த்தி அஸ்வின் புது சாதனை!

Last Updated: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (21:05 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 
போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும், இரண்டாவது இன்னிங்சில் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மென்களை திணற வைத்துள்ளார். 
 
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் ஒரே கேப்டன் தலைமையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பந்துவீச்சாளராக உள்ளார். 
 
அதோடு, விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு கேப்டன் தலைமையில் 200 விக்கெட் வீழ்த்தி முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :