ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (14:01 IST)

டெஸ்ட் தொடரில் தோற்றது பெருமை அளிக்கிறது - விராட் கோலி

இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போடியில் விளையாடி வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கியது.
 
இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்திடம் 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
 
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் போட்டியில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
 
வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முன்னிலை வகிப்போம் என கோலி தெரிவித்தார்.