வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (09:09 IST)

மீண்டும் மீண்டும் ஒரே தவறு… பாபர் அசாமின் கேப்டன்சிக்கு கடும் கண்டனம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. இதில் போட்டியில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்த பாகிஸ்தானிடம் இருந்து விராட் கோலி, போராடி பறித்து இந்திய அணியை வெற்றிப் பெறவைத்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேபட்ன் பாபர் அசாமின் வியூகங்கள் இப்போது கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்களான சலிம் மாலிக் மற்றும் ஹபீஸ் ஆகியோர் “மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்யும் பாபர் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்” எனக் கூறியுள்ளனர்.