திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:46 IST)

சில மணிநேரங்களில் பறிபோனது இந்தியாவின் முதல் இடம்… மீண்டும் முதலிடத்தில் ஆஸி!

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 114 புள்ளிகளோடும், ஆஸி 111 புள்ளிகளோடும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆஸி அணி 126 புள்ளிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, முதல் இடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்து ஆஸியோடு நடக்கும் போட்டிகளை வென்றால் இந்திய அணி முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.