1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (22:07 IST)

கருத்து சுதந்திரம் ரொம்ப முக்கியம்: பிபிசி நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆதரவு!

america
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்துக்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் பிபிசி நிறுவனத்திற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்திரிகை சுதந்திரம், கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாளிக்கும் என்றும் சர்வதேச உரிமைகள் ஜனநாயகத்தின் அடிப்படையானவை என்றும் தெரிவித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் சுதந்திரமான ஊடக செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஊடக செயல்பாடு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு அமெரிக்கா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva