திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (08:10 IST)

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை!

ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. மதியம் மூன்று மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

ஆசியக் கோப்பையில் இந்தியாவின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பிசிசிஐ இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துள்ளது.

இந்த தொடரின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.