திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:41 IST)

நாளை முதல் ஆசியகோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம்  நாடுகள் இடையே நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை முதல் தொடங்க உள்ளது. 
 
நாளைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் சற்றுமுன் ஆசிய கோப்பையில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை அணியின் வீரர்கள் குறித்த முழு விவரம் இதோ:
 
துஷன் சங்கரா, நிசான்கா, கருணரத்னே, பெராரா, மெண்டிஸ், அஸ்லாங்கா, டிசில்வா, சமரவிக்ரம, தீக்‌ஷனா, துனித், ரஜிதா, ஹெமந்தா, பெர்னாண்டோ மற்றும் மதுசூன்,
 
Edited by Siva