திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:06 IST)

ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட மூத்த வீரர்களோடு ஆலோசிக்கும் சூர்யகுமார் யாதவ்!

கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் ப்ளேயிங் லெவனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாட மூத்த வீரர்களான “ரோஹித் ஷர்மா, கோலி போன்ற மூத்த வீரர்களுடனும், டிராவிட் உடனும் ஆலோசித்து வருகிறேன். என்னால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.