திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (21:18 IST)

ஆசிய கோப்பை: சொதப்பிய வங்கதேச அணி... வெற்றியை நோக்கி இலங்கை அணி

asia cup -bangaldesh -srilanka
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  நடந்து வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் பங்களதேஷுக்கு எதிராக இலங்கை விளையாடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதில், நயிம் 16 ரன்னும், ஷாண்டு 89 ரன்னும், ஷிரிடா 20 ரன்னும், ரஹிம் 13 ரன்னும் அடித்தனர்.

எனவே 43.4 ஓவரில் இலங்கை அணியின் பந்து வீச்சில் 164 ரன்களுக்கு வங்கதேசம் சொற்ப ரன்களுக்கு சுருண்டது.

இலங்கை அணி சார்பில் தீக்‌ஷனா 2விக்கெட்டும், பதிரனா 4 விக்கெட்டும், சில்வா, டுனித், டசன் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இலங்கை அணியின் நிசாங்கா 14 ரன்னும், மெண்டிச் 5 ரன்னும், சடீரா 54 ரன்னும் அடித்தனர். தற்போது, அசலங்கா 34 ரன்னும், சில்வா களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இந்த அணி 29.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்னுடன் விளையாடி வருகிறது.