ஆசிய கோப்பை: இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள்...ஜெயிக்குமா இந்தியா?
இன்றைய ஆசிய கோப்பை போட்டியில், இலங்கை அணியின் பேட்டிங் செய்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா, கடைசிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வாழ்வா, சாவா என்ற நிலையில், கட்டாயம் ஜெயித்தால் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கையை எதிர்கொண்டு வருகிறது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி பேட்டிங்கில் தொடக்க வீரர் ராகுல் சொற்ப ரன்களில் வெளியேற, ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்து அணிக்கு பக்க பலமாக இருந்தார், இரண்டு போட்டிகளில் அசத்திய விராட் கோலி டக் அவுட் ஆனார். யாதவ் 34 ரன்களும் பாண்ட்யா 17 ரன்களும், பாண்ட் 17 ரன்களும், அஸ்வின் 15 ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, இலங்கை அணியினர் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர். அதில், நிஷாங்கா 52 ரன் களும், மென்டிஸ் 57 ரன்களும் அடித்துள்ளனர்.
இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 14.1 ஓவர்களில் 110 ரன்கள் அடித்துள்ளது. இந்தியாவின் சாஹல் 3 விக்கெட்டுகளும்,அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.