வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா-இலங்கை மோதல்!

india
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது 
 
சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி நூலிழையில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து சூப்பர் 4 சுற்றில் இன்றைய போட்டியில் இலங்கையை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் தகுதி பெற்று உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்று உள்ள நிலையில் இன்று இந்தியாவையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்