வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:58 IST)

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளர் நியமனம்!

india won wi
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக  விவி.எஸ். லட்சுமணம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரொனா தொற்று  உறுதியாகியுள்ள நிலையில், அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

எனவே இந்திய அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ். லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
vvs laxman

ஆசியப் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியில் திறமையாக விளையாடியதுபோல் இப்போட்டியில் இந்தியா ஜொலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.