திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (21:37 IST)

ஜிம்பாவேக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

india won wi
ஜிம்பாவேக்கு எதிரான 2 வது போட்டியிலும் வெற்றிய பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.

 இந்திய அணி  ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் சென்றது. 6 ஆண்டுகளுக்குப் பின்  ஜிம்பாவே சென்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி,. இன்று இரண்டாவது போட்டியில் ஜிம்பாவேவுடன் மோதியது.

முதலில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார். இப்போட்டியில் தீபக் சகாருக்கு பதில் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். 

ஜிம்பாவே அணியில் 38.1 ஓவரி 167 ரன்னில் ஆல் அவுட் ஆகி இந்தியாவுக்கு 162 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்தியா ணியில் 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே 2-0 எனற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.