இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலாமானார். அவரது வயது 71. அவரது இறப்புக்கு கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 205 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்திய அணிக்கு இரண்டு முறை தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். அவர் தலைமையில்தான் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
அன்ஷுமானின் மிக நெருக்கமாக இருந்தவர் கபில்தேவ். அன்ஷுமானின் சிகிச்சையின் போது அவருக்கு பிசிசிஐ உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் பிசிசிஐ அவருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.