சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஆர் சி பி அணிக்கு நெட் பவுலராக இருந்தவரா ஆகாஷ் மத்வால்?

நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபயர் 2 முன்னேறிய நிலையில் ஆகாஷ் மத்வாலின் விக்கெட்டுகள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் மும்பை அணி பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் காட்டிய மாஸ் பலரையும் வியக்க வைத்தது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் ஆகாஷ் மத்வாலின் செய்கை லக்னோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மொத்தம் 3.3 ஓவரே வீசியிருந்த ஆகாஷ் மத்வால் மொத்தம் கொடுத்ததே 5 ரன்கள் மட்டும்தான். 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை அசால்ட்டாக தூக்கிய மத்வாலை கண்டு மற்ற அணிகளுமே மிரண்டிருந்தால் ஆச்சர்யமில்லை. இவ்வளவு குறைவான ஓவர்களில் குறைவான ரன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் மத்வால்.

இந்த சீசன் முழுவதும் சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்துவரும் மத்வால், தொடக்கத்தில் சில ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு நெட் பவுலராக பணியாற்றியுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு அங்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மும்பை அணியால் எடுக்கப்பட்டது அவர் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதுபோல ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சேத்தன் சக்காரியாவும் ஆர் சி பி அணியில் நெட் பவுலராக இருந்தவர்தானாம்.