Daily Horoscope
✕

துறைமுகத்தில் தனியார் பங்களிப்பு; ‘அதானி.. அதானி’ என கத்திய எதிர்க்கட்சிகள்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:24 IST)
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் துறைமுகத்தில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் அமளி செய்துள்ளன.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சுகாதாரம், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில்,

தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகின. அதை தொடர்ந்து துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்பும் வெளியானது.

இதனால் அமளி ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் ‘அதானி.. அதானி’ என கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தமிழகத்தில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதானி குழுமம் தொடர்பான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பட்ஜெட் அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments