வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:51 IST)

O2 படத்துக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காத நயன்தாரா? அப்செட் ஆன படக்குழு!

நயன்தாரா நடிப்பில், அவரின் திருமணத்துக்குப் பின்னர் நேரடியாக ஓடிடியில் ரிலீஸான திரைப்படம் O2.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய படங்களுக்கு பிறகு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் மூன்றாவது படமாக வெளியானது.

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் இருப்பவர்கள் பறிக்க நினைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. இந்த செண்டிமெண்ட் கதைக்களத்தோடு பேருந்தில் போதை மருந்து கடத்தும் கும்பல், மற்றும் சிறையில் இருந்து விடுதலை ஆகி தன் அம்மாவை சந்திக்க செல்லும் நபர் என சுவாரஸ்யமான சில கிளைக்கதைகளைக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆரம்ப காட்சிகளில் வெகுவாகக் கவர்கிறது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பின் காட்சிகளின் சுவாரஸ்யம் குறைந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே இல்லாமல் செல்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் பட ரிலீஸூக்குப் பிறகு தற்போது படத்தின் உருவாக்கத்தின் போது நயன்தாரா பெரிய அளவில் இயக்குனருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக பேருந்து மண்ணுக்குள் சிக்கிகொண்ட போது கண்ணாடிகள் உடைந்து மண் அவர் மேல் விழுவது போல காட்சிகளை இயக்குனர் எழுதி இருந்தாராம். ஆனால் அதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என நயன்தாரா மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Source Valaipechu