திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:18 IST)

விஜய்யின் வாரிசு பட டைட்டில் பெற்றது எப்படி? சுவாரஸ்ய தகவல்

Varisu
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பி வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் பிரமாண்ட படம் விஜய்66. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்  விஜய் பிறந்த நாளையொட்டி ஒரு நாள் முன்னதாக நேற்று வெளியானது. அதில், விஜய்66 படத்திற்கு  வாரிசு என்று ,  the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதில்,  விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று விஜய் பிறந்த நாளுக்கு மற்றொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் எப்படி கிடைத்துள்ளது என்பது பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்66 படத்திற்குதான் இந்த டைட்டில் வேண்டும் என யாரிடமாவது சொன்னால் இதற்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் இதை ரகசியதாக தேடியுள்ளது படக்குழு. இப்படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் கண்ணன் என்ற தயாரிப்பாளரிடம் இருந்துள்ளது.

அதன்பின்னர், ஒரு டம்மி தயாரிப்பாளரை செட் பண்ணி, அவரை, அந்தக் கண்ணன் என்ற தயாரிப்பாளரிடம் சென்றுபோய் பணத்தை செட்டில் செய்து, அவரிடமிருது என்.ஓ.சி பெற்று வந்த பிறகுதான், இப்படத்திற்கு டைட்டில் உருவானது எனக் கூறப்படுகிறது.