வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (16:01 IST)

'தாய்லாந்தில் தாரத்துடன்' ஜாலி மூடில் விக்கி!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர். 
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஜூன் 9 ஆம் தேதி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடந்த ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, விக்னேஷ் சிவன் தங்களின் புதிய தொடக்கத்தை சமூக ஊடகம் வாயிலாக  அழகான புகைப்படங்களுடன் அறிவித்தார்.  

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தற்போது தங்களது தாம்பத்ய வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆம் இருவரும் தேனிலவுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 
 
நயன்தாரா அழகான மஞ்சள் நிற உடையை அணிந்திருக்கிறா, விக்னேஷ் சிவன் ஒரு சாதாரண கருப்பு டி-சர்ட்டையும் ஆலிவ் பச்சை நிற பேன்ட்டையும் போட்டு போட்டோக்களுக்கு காதல் சொட்ட சொட்ட போஸ் கொடுத்துள்ளனர்.