திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (09:53 IST)

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு… ஜெயம் ரவி & நயன்தாரா நடிக்கும் புதிய படம்… தலைப்பு இதுதானா?

ஜெயம் ரவி பொன்னியின் செல்வன், அகிலன் திரைப்படங்களை அடுத்து பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் பூமி. மோசமான கதை மற்றும் திரைக்கதை காரணமாக இணையத்தில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது அந்த திரைப்படம். இதையடுத்து அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைபடங்கள் முடிந்து ரிலீஸூக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ‘இறைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொலல்ப்படுகிறது.