நயன்தாரா படத்திற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஓ2 இப்படத்திற்கு 2 ஆண்டுகள் உழைத்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன் நடித்த படம் ஓ2. இப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இயக்குனர் ஜிஎஸ்.விக்னேஷ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை பாராட்டி வருகின்றனர். இப்படம் குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் விங்கேஷ் இக்கதை சொன்ன போதிலிருந்து இப்படத்தோடு பயணித்தேன். அதனால், இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கு எப்படி படமக்குவது என்பது பற்றி திட்டமிட்டேன். அதனால், 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கிவிட்டேன். இருப்பினும் பல சவால்கள்
இருந்தன..இப்படத்திற்கு நடிகை நயன் தாரா முழு ஒத்துழைப்பு கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.