”இந்தி சினிமாவில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை”… மகேஷ் பாபு அதிரடி கருத்து!
நடிகர் மகேஷ் பாபு இந்தி சினிமாவில் நடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் இந்தி சினிமாக்களில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு “நிறைய இந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறியுள்ளார்.