1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (18:38 IST)

விஜய்- லோகேஷ் கனகராஜ்- கமல் கூட்டணியா? லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பிற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் தற்போது பரபரப்பாக படப்பிடிப்பில் உருவாகி வருகிறது.

இதையடுத்து விஜய் நடிக்கும் அவரின் 67 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் இப்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கமல், இந்த படம் இல்லாவிட்டால் மீண்டும் அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு படத்தைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Source Valaipechu