இந்த அழகான இளவரசிக்கு தான் அவ்வளவும் செய்தேன் - ஆல்யா பட்டின் கர்ப்பகால டயட்!
பாலிவுட் சினிமாவின் இளம் ஹீரோயின்களில் ஒருவரான நடிகை ஆல்யா பட். இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
.
அண்மையில் தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறப்புக்காக ஆல்யா பட் நிறைய சத்தான உணவுகளை சாப்பிட்டதாக கூறி டிப்ஸ் கொடுத்துள்ளார். கர்ப்பத்திற்கு முன்பிருந்தே எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைய எடுத்துக்கொண்ட அவர் ஆரோக்கியமான குழந்தை பெற ஒரு நாளைக்கு 4 முதல் 9 முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்வார். வைட்டமின்கள், நியூட்ரிசன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை சாப்பிடும் உணவில் உள்ளதா என தினம் தினமும் பார்த்து பார்த்து சாப்பிடுவேன். எப்போவாச்சும் ஆசைப்பட்டால் பீட்சா சாப்பிடுவேன் என கூறினார்.